இலங்கைசெய்திகள்

சீரற்ற காலநிலையால் பாரிய பாதிப்பு!!

Inclement weather

இதுவரையில் 7 மாவட்டங்களில், 2,911 குடும்பங்களைச் சேர்ந்த 11, 811 பேர் சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தங்களால் மூவர் உயிரிழந்ததுடன், நால்வர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை ஆகிய 8 மாவட்டங்களுக்கு நேற்று முதல் மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கண்டி மாவட்டத்தின் மெததும்பர பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button