இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண புதிய பிரதம செயலாளர் பதவியேற்றார்!!

Inauguration of the new Chief Secretary of the Eastern Province

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட டி.எம்.எல்.பண்டாரநாயக்க தமது கடமைகளை இன்று (7)திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் சமயத்தலைவர்களின் ஆசீர்வாதத்தின் பின்னர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஸ்ட்ட அதிகாரியான இவர் இதற்கு முன்னர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாடிகோராள, திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஏ.ஜே.எம்.சாலி
திருகோணமலை.

Related Articles

Leave a Reply

Back to top button