சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் மற்றும் நாட்டின் அதிகாரிகளுக்கு இடையிலான மற்றுமொரு பேச்சுவார்த்தை இன்று ஆரம்பமாகவுள்ளது.
பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்தங்கள், கொள்கைகள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு வருகை தந்துள்ளது.
இந்தக் குழு எதிர்வரும் 31 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கிருக்கும் என சர்வதேச நாணய நிதியம் முன்னதாக தெரிவித்திருந்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீற்றர் புருவர் மற்றும் இலங்கை குழுவின் தலைவர் மசாஹிரோ நொசாகி ஆகியோர் தலைமையில் இந்தக் குழு வழிநடத்தப்படவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டுக்கான, பணிக்குழாம் மட்ட ஒப்பந்தத்தை நோக்கி முன்னேறுவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
நிதி அமைச்சு, மத்திய வங்கி உள்ளிட்ட சில நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையில் பங்குபற்றவுள்ளனர்.