இலங்கைசெய்திகள்

மிகவும் அபாயகரமான பகுதிகளாக 12 மாவட்டங்கள் அடையாளம்!!

Identified as dengue risk areas

ஜனவரி மாதத்தில் மாத்திரம் 7,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள அதேவேளை , தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் 12 மாவட்டங்களும், 81 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் டெங்கு அபாயப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், புத்தளம், காலி, யாழ்ப்பாணம், கண்டி, இரத்தினபுரி, அம்பாறை, திருகோணமலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள அதேவேளை, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button