இலங்கைமுக்கிய செய்திகள்

கந்தக்காடு சம்பவம் – மனித உரிமை ஆணைக்குழுவின் நடவடிக்கை!!

Human Rights Commission

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக் குழு இன்று கந்தக்காடு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இடம்பெற்ற மோதல் நிலை குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவே இந்தக் குழு அங்கு செல்வதாக கூறப்படுகின்றது.

மோதல் சம்பவம் மற்றும் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்தமை விசாரணைகளை முன்னெடுப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் பெருமளவானோர் தப்பிச் சென்றிருந்தனர்.

இதையடுத்து, பாதுகாப்புத் தரப்பினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளில், 653 பேர் மீளவும் பொறுப்பேற்கப்பட்டதுடன், 70 பேர் தொடர்ந்தும் தேடப்படுகின்றனர். சம்பவம் தொடர்பில் உள்ளக விசார

காவல்துறையினர், காவல்துறை விஷேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் தொடர்ந்தும் தேடுதல்களை முன்னெடுத்து வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button