இலங்கைசெய்திகள்

வவுனியாவில் இராணுவத்தினரால் 4.5 மில்லியன் ரூபா பெறுமதியான வீடு கையளிப்பு!!

house

வவுனியா பழைய சுந்தரபுரம் கிராமத்தில் வசிக்கும் வடிவேல் சுரேஸ் என்பருக்கே குறித்த வீடானது இராணுவத்தினரால் நிர்மானிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதுடன், வீட்டிற்கு தேவையான தளபாடங்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படை தளபதி ஜெனரல் சம்பக்க ரணசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த வீட்டினை திறந்து வைத்திருந்தார்.

குறித்த வீடானது சோபித தேரர், மற்றும் வவுனியா வார்த்தகர் மயூரதன் ஆகியோரின் நிதி பங்களிப்பிலும் 15வது சிங்க றெஜிமன்ற் படைப்பிரிவினரின் வேலை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

செய்தியாளர் – கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button