கட்டுரைசெய்திகள்

ஒரு ஓட்டப் பந்தய வீரனின் நேர்மை!!

Honestly

 இந்த ஓட்டப் பந்தய போட்டியில் முதலில் இருப்பவர் கென்யா நாட்டைச் சேர்ந்த ஆபேல் , அவருக்கு பின்னால் இருப்பவர் ஐவன் பெர்னான்டெஸ் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் ,

இறுதிச் சுற்றில் சில அடிகளே பாக்கி இருக்கும் நிலையில் ஆபேல் எல்லையை கடந்து விட்டோமென நினைத்து. எல்லையில் வரைந்த கோடுகளின் குழப்பத்தின் காரணமாக நின்று விடுகிறார், 

ஆனால் அவருக்கு பின்னால் வந்த ஐவன் பெர்னான்டெஸோ ஸ்பெயின் மொழியில் அவரை இன்னும் சில அடிகள் உள்ளன, இது முடியும் எல்லை இல்லை என்று கூச்சலிடுகிறார்,

ஆபேலுக்கு ஸ்பெயின் மொழி தெரியாததால் , அவர் நின்று விட பின்னால் வந்த ஐவன் பெர்னான்டெஸோ அவரை முன்னுக்குத் தள்ளி எல்லையைக் கடக்க வைக்கிறார்.

போட்டி முடிந்து பத்திரிக்கை நிருபர்கள் ஐவன் பெர்னான்டெஸை நீங்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள் நீங்கள் முதலிடத்திற்கு வந்து இருக்கலாமே என்று கேட்க.. 

அது ஒரு வெற்றி ஆகாது , உண்மையான வெற்றியாளன் ஆபேல் மட்டுமே , எல்லையில் வரைந்த கோட்டின் குழப்பத்திலேயே ஆபேல் நின்று விட்டார் ,

அவரை முந்தி நான் வெற்றி பெற்றிருந்தேன் என்றால் எனது தாய் அதை சத்தியமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் .

என்று சொல்லி விடை பெற்றார் .

நண்பர்களே..! நமக்கு இந்த எண்ணமிருக்குமா? யாரை ஏமாற்றலாமென்றல்லவா நினைத்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறோம்?

நமது பிள்ளைகளுக்கும் யாரையும் ஏமாற்றி வெற்றி பெறக் கூடாது என்று சொல்லித் தருவோம்.

நன்றி!!

Related Articles

Leave a Reply

Back to top button