தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் வங்கி விடுமுறை விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் பண்டிகையை முன்னிட்டு இன்று (29) வியாழக்கிழமை வங்கி மற்றும் பொது விடுமுறை தினமாகும்.
இந்த நிலையில், நாளை வெள்ளிக்கிழமை (30) வங்கிகளுக்கு விசேட விடுமுறை அளிப்பதாக அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
ஜூலை மாதம் முதலாம் மற்றும் 2ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமையாகும். ஜூலை மாதம் 3 ஆம் திகதி போயா தினமாகும்.
இதனால், தொடர்ந்து 5 நாட்கள், நாட்டின் வங்கிச் சேவை முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.