நோர்வேயை சேர்ந்த புலம்பெயர் உறவு ஒருவர் நேற்றைய தினம் (12.11.2023) மிகவும் வறுமை நிலையில் இருக்கும் தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார். இவர், தொடர்ச்சியாக சமூக சேவைகளில் ஈடுபட்டுவரும் ஒருவராவார்.
மழை காரணமாக வேலைகளின்றி பல குடும்பங்கள் வறுமையில் இருக்கின்ற இத்தருணத்தில் இவரது உதவி பயனாளர்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது.
உதவிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் இவருக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துள்ள நிலையில் சமூக ஆர்வலர்களும் தமது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.