புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் ராஜ்குமார் ராதிகா தம்பதிகள் தமது மகள் அபிநயாவினா பிறந்த தினத்தை முன்னிட்டு
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசம் ஒன்றில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் 35 பேரிற்கு புத்தகப் பைகள் வழங்கி வைத்துள்ளார்கள்.
அத்தோடு பெண் தலைமைத்துவக் குடும்பத்து சகோதரி ஒருவரிற்கு அவர் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக பசுமாடு ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மிக வறுமை நிலையில் இருக்கும் 3 மாணவர்களிற்கு 5000 ரூபா வீதம் வங்கியில் பணவைப்பும் செய்யப்பட்டுள்ளது.
உதவி பெற்றவர்கள் செல்வி அபிநயாவை வாழ்த்தியுள்ளதுடன் தமது நன்றியையும் தெரிவித்தனர்.
அத்துடன் சமூக ஆர்வலர்கள் பலரும் இவர்களின் நற் செயலுக்குத் தமது பாராட்டினைத் தெரிவித்துள்ளனர்.