09-12-16 வெற்றி ஒலி இணைய வானொலி தொடங்கப்பட்டதன் 5 ஆம் ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு இவ் வானொலியின் நிறுவுனரான லண்டனில் வசிக்கும் சகோதரர் முகுந்தன் அவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் மழையினால் பாதிக்கப்பட்டு மீள்நிலைக்கு வராத ஒரு கிராமத்திலுள்ள 60 குடும்பங்களிற்கு தலா இரண்டாயிரம் வீதம் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார்.
அடிப்படையில் இயங்கும் இவ் வானொலியின் பணியானது தமிழ்பேசும் மக்களிற்கானதாகும்.
இதன் ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு இவ்உதவிகளை வருடா வருடம் மக்களிற்கு வழங்கி வருகிறார்.
இந்த வெற்றி ஒலி வானொலியானது இன்னும் சிறப்பாக உலகெங்கும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என ஐவின்ஸ் இணையதளமும் வாழ்த்துகின்றது.