புலம்பெயர் தேசத்தில் தாயகக் கனவுகளுடன் வாழும் மட்டுவில் கைதடி இளைஞரள், யுவதிகளின் சுயாதீன செயலணியான கராஜ் போய்ஸ் நண்பர்கள் குழுவானது தாயகம் நோக்கிய வறுமை ஒழிப்பு தொழில் முயற்சி திட்டத்தின் ஊடாக கைதடி சாவகச்சேரி பகுதியில் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு 700 000 நிதி பங்களிப்பில கணினி வடிவமைப்பு மற்றும் அச்சக தொழிற்கூடம் அமைத்துக் கொடுப்பதற்கான முதற்கட்டப் பணி கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தாயகம் நோக்கிய வறுமை ஒழிப்புச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது 7 வது செயற்துட்டமாகும். சமூக ஆர்வலர்கள் பலரும் கராஜ் போயஸ் நண்பர்கள் குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.