கணவன் இன்றி இரண்டு பிள்ளைகளோடு வசித்து வரும் முன்னாள் பெண் போராளி ஒருவருக்கு சுயதொழில் உதவியாக மரக்கறி கடை ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியா சிட்னியைச் சேர்ந்த சகோதரர் ஒருவர்
குடிபான வகைகளின் வெற்றுப் போத்தல்களைச் சேகரித்து அதனை மீள் சுழற்சிக்கு அனுப்பி அதன் மூலம் பெற்ற பணத்தில் இந்த உதவியினைச் செய்துள்ளார்.
மக்களோடு நின்று இறுதிக் காலம்வரை பணியாற்றி யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இன்னும் மீளமுடியாத நிலையில் இருக்கும் எமது உறவுகளுக்கு
உதவிகளை செய்ய வேண்டும் என்று நல்லெண்ணத்தில் இவ்வாறானதொரு முயற்சியில் போத்தல்கள் சேகரித்து ஒரு குடும்பத்து வாழ்வாதாரத்திற்கு உதவி புரிந்துள்ளார்.
உண்மையில் இது மிகவும் பாராட்டுக்குரிய ஒரு விடயமாகும்.
இன்றைய காலத்தில் தாமுண்டு தமது குடும்பம் உண்டு என்று பலரும் வாழ்ந்துவரும் சூழலில் மற்றவர்களிற்கு ஒரு முன்மாதிரியான செயற்பாடாக இது அமைந்துள்ளது. உதவி புரிந்த நல்லுள்ளம் கொண்ட சகோதரனிற்கு எமது ஐவின்ஸ் இணையத்தளம் சார்பில் நாமும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தகவல் – பிரபா அன்பு