செய்திகள்புலச்செய்திகள்

கல்விக்கு கரம் கொடுப்போம் செயற்றிட்டத்தினூடான உதவி வழங்கும் நிகழ்வு!!

help

ஜேர்மன் நாட்டில் வசிக்கும் பிரகாஷ் அருள் என்பவர் தனது பிறந்த தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியிலுள்ள கல்மடுநகர் அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் முககவசம், சிற்றுண்டி, என்பவற்றை வழங்கிவைத்துள்ளார்.

மிக நெருக்கடியான காலங்களில் தாயக உறவுகளுக்கு புலம்பெயர் உறவுகளே கரம்கொடுத்து வருகின்றனர். இச்செயலுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


அந்த வகையில் இவ் உதவியை வழங்கிய புலம்பெயர் உறவிற்கு பாடசாலைச் சமூகமும் நன்றிதெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்கள் தமது சுயதயாரிப்பாக வாழ்த்து அட்டை ஒன்றையும் பரிசளித்திருந்தனர். கஷ்ரப்பிரதேசத்தில் அமைந்துள்ளபோதும் மாணவர்களின் நேர்தியான நன்றி அறிவிப்பு பலரையும் வியக்க வைத்தது. இத்தகைய பாடசாலைகளின் மாணவர்களுக்கு வளங்களையும் வாய்ப்புகளையும் வசதிகளையும் பெருக்கி கொடுக்கவேண்டியது அனைவரினதும் கடமையாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button