இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

அதிக வெப்பத்தால் கண் பாதிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை!!

Heavy temperature

 சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரினதும் கண்களில் நேரடியாக சூரிய ஒளி படாத வண்ணம் செயற்படுமாறும், தரமான கண்ணாடிகள் மற்றும் தொப்பிகளை அணியுமாறும் தேசிய கண் வைத்தியசாலையின் சிநேஷ்ட வைத்தியர் பிரசாத் கொலம்பகே அறிவுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நேரடியாக சூரிய ஒளி அதிகமாகப்படும் பட்சத்தில் கண்கள் பாதிக்கப்படும் என்றும் கண் நோய்கள் மற்றும் பிற பிரச்சினைகளின் ஆபத்தை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கண்ணாடிகள் அணிவதன் மூலம் சில கண் பிரச்சினைகள் வராதவாறு தவிர்க்கலாம் என்று குறிப்பிட்ட அவர், நேரடி சூரிய ஒளியால் வாந்தி, தலைசுற்றல் அல்லது மயக்கம் ஏற்படலாம் என்றும் தெரிவித்தார்.

அவ்வாறான நிலை ஏற்பட்டால் வைத்தியர்களிடம் மருத்துவ சிகிச்சை பெறுவது சிறந்தது உனவும் நீரிழப்பைத் தடுக்க தண்ணீர் மற்றும் திரவங்களை அருந்துமாறும் அவர் அறிவுறுத்தினார்.

Related Articles

Leave a Reply

Back to top button