Uncategorized

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!!

heavy rain

இலங்கைக்கு கிழக்காக தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதால் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு கிழக்காக நிலை கொண்டுள்ளதால் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், யாழ்ப்பாணத்தில் அதிகளவான வெப்பநிலை பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அங்கு 29.4 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

அதேவேளை 11.1 பாகை செல்சியஸ் என்ற அதிகுறைந்த வெப்பநிலை, நுவரெலியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

இதேநேரம், குறித்த காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அங்கு 143. 4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button