இலங்கைசெய்திகள்

வவுனியாவில் அதிக பனி மூட்டம் – சாரதிகள் அசௌகரியம்!!

Haze

வவுனியாவில் இன்று அதிகாலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர்.
வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது.

இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள், வேலைக்கு செல்வோர், வாகனச்சாரதிகள் எனப் பலரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். 
ஏ9 வீதி உட்பட வவுனியாவில் வீதியால் சென்ற வாகனங்கள் காலை 7.30 மணிவரை ஒளியைப் பாய்சியபடி சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. 
அண்மைக்காலமாக அதிகளவு மழையுடன் கூடிய காலநிலை வவுனியாவில் காணப்பட்ட போதிலும் தற்போது அதிக பனி மூட்டமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button