பொசன் தினத்தில் பௌத்த மக்களால் தானங்கள் வழங்கப்படுவது வழமையான ஒன்றாகும்.
நேற்றைய பொசன் நாளில் வித்தியாசமான முறையில் தானம் ஒன்று வழங்கப்பட்டது.
நேற்று அனுஷ்டிக்கப்பட்ட பெளத்த மக்களின் முக்கிய தினமான பொசொன் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு ஹொரணையில் வித்தியாசமான முறையில் தானம் ஒன்று இடம்பெற்றது.
தலைமுடியை வெட்டுவதற்கான தானம் என்று இது கூறப்பட்டது.
அழகுக்கலை நிபுணரான ஷியாமலி விஜேரத்ன இதனை ஏற்பாடு செய்திருந்ததுடன், அவரது சிஷ்யர்கள் முடிதிருத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என 104 பேருக்கு இலவசமாக முடித்திருத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பலரும் இந்த வித்தியாசமான தான் முறை தொடர்பில் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர்.