இலங்கைசெய்திகள்விளையாட்டு

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த திருகோணமலை இளைஞன்

இலங்கையின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட விபுலானந்தன் கௌரிதாசன் என்பவர் உலகசாதனைப் புத்தகமான “கின்னஸ்” இல் இடம்பிடித்துள்ளார்.

குறித்த உலக சாதனைக்காக உலகெங்கிலுமிருந்து ஏறத்தாழ 150,000 ஓட்ட வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

இந்த ஓட்டப் போட்டியில், சுமார் 115,000 பேர் தகுதிகாண் நிலையில் நிராகரிக்கப்பட்டு 35,570 பேர் கின்னஸ் சாதனைக்கான புத்தகத்தில் அவர்களின் பெயர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுக்கான தர வரிசை வெளியிடப்பட்டுள்ளது. 

அந்தத் தர வரிசையின்படி 35,570 ஓட்ட வீர, வீராங்கனைகளுள் திருகோணமலையைச் சேர்ந்த இளைஞர் 609 ஆவது  இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையைச் சேர்ந்த விபுலானந்தன் கெளரிதாசன் படைத்தது உலக சாதனையா என்ற கேள்விகள் பலருக்கு எழுந்தாலும் உலக சாதனைக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓட்டப்பந்தையக் குழுவில் (Virtualrunners) இணைந்து தகுதிகாண் நிலையில் பெயரிடப்பட்டவர்களில் இவரும் ஒருவர் என்பதும், “GUINNESS World RECORDS” அமைப்பினால் இது வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button