உலகின் மிகக் காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை 33 வினாடிகளில் சாப்பிட்டு இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த கிரிகோரி ஃபோஸ்டர், 10 காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை 33.15 வினாடிகளில் முழுவதுமாக சாப்பிட்டு, தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.
நாம் உணவில் எடுத்துக் கொள்ளும் காரத்தை ஸ்கோவில் ஹீட் யூனிட்கள் என்ற அலகில் மதிப்பிடுவார்கள்.
அதன்படி, கரோலினா ரீப்பர் மிளகாய் ஒன்றில் உள்ள காரத்தின் அளவு 16 இலட்சத்து 41,184 SHUஆகும்.