கல்விமுக்கிய செய்திகள்

31 . 12 . 2021 வெள்ளிக்கிழமை அன்று ஆசிரியர் சண். சுதர்சன் அவர்களின் கற்றல் வழிகாட்டி கருத்தரங்கு!!

gread 5 seminar

ஆசிரியர் சண். சுதர்சன்.
யா / கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை

ஐவின்ஸ்தமிழ் .கொம் செய்தி இணைய தளத்தின் கல்வி பகுதி தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்காக முற்றிலும் இலவசமாக நடாத்தும் பரீட்சை வழிகாட்டல் கருத்தங்கின் நான்காம் அமர்வில் கடந்தகால வினாக்களை பகுப்பாய்வு செய்து இவ் ஆசிரியரின் சிந்தனையிலான மாதிரி எதிர்பார்க்கை வினாத்தாள்கள் வெள்ளிக்கிழமை காலை 8. 00 மணி தொடக்கம் 12.00 மணிவரையான 4 மணித்தியாலங்கள் கொண்டதாக மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படும்.

மேற்படி வினாத்தாள்களின் வளவாளர் சண். சுதர்சன் அவர்கள் கடந்தகாலத்தில் 10 வருடங்களுக்கு மேலாக புலமைச்சுடரில் தொடர்ச்சியாக பல நூற்றுக்கணக்கான பரீட்சை வினாத்தாள்களை தொகுத்துத் தந்து நாடு முழுவதும் அதிகளவான மாணவர்கள் சித்தி பெற பெரும் பங்காற்றியவர் என்பதுடன்

ஆசிரியர் பல ஆண்டுகளாக மலையகத்தில் தனது கற்பித்தல் நடவடிக்கையை முன்னெடுத்து குறிஞ்சி என்ற வெளியீட்டின் மூலம் தொடர்ச்சியாக வினாத்தாள்களை வெளியிட்டு வந்தவர். மலையக மாணவர்களின் வெற்றிக்காக முன்னின்று செயற்பட்டு வந்த இவர் தற்போது யாழ். கொக்குவில் ஆரம்ப பாடசாலையில் தனது பணியைச் செவ்வனே செய்வதன் மூலம் பல மாணவர்களைச் சித்திபெற வைத்துள்ளார்.
அவரது கற்பித்தல் உத்தி மூலம் உச்ச பயனை அடைந்து மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைய ஐவின்ஸ்தமிழ் இணையதளம் மனதார வாழ்த்துகிறது.

அன்பான மாணவர்கள் பெற்றோர்களுக்கு ஒரு அன்பான அறிவிப்பு – எமது நேரமாற்றத்திற்கமைவாக கருத்தரங்கில் கலந்துகொள்ள முடியாதவர்கள் எமது youtube தளத்தில் கற்றல் செயற்பாடுகளை பார்வையிட முடியும்.

Related Articles

Leave a Reply

Back to top button