கல்விமுக்கிய செய்திகள்

முதல் 2 நாள் அமர்வில் 100 எதிர்பார்ப்பு மாதிரி வினாக்கள் – அம்பிகைபாகனின் விசேட தயாரிப்பில்!!

grade 5

ஐவின்ஸ்தமிழ் இணையதளம் முற்றிலும் இலவசமாக தரம் 5 மாணவர்களுக்காக நடாத்தும் புலமைப்பரிசில் பரீட்சை கருத்தரங்கில் இலங்கையின் புகழ்பூத்த முன்னணி ஆசிரியரான திரு. அம்பிகைபாகன் அவர்கள் இரண்டு நாட்களும் முன்னெடுக்கவுள்ள கற்பித்தல் தொடர்பான தகவல்.

கடந்த வருட வினாத்தாள்களைத் தழுவி எதிர்வரும் பரீட்சையில் மாணவர்களிடம் கேட்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் 100 வினாக்களை ஐம்பது ஐம்பதாக இருநாட்களும் பயிற்சியளிக்கவுள்ளார்.
அத்துடன் பகுதி 1 பகுதி 11 அடங்கலான வினாத்தாள் ஒன்றையும் மாணவர்களின் சுயபயிற்சிக்காக தரவுள்ளார்.

இக்கருத்தரங்கானது அனைத்து மாணவர்களின் நலன் கருதி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதால் இலங்கை வாழ் தமிழ் முஸ்லீம் மாணவர்கள் 1000 இற்கு மேல் பங்கேற்றால் zoom பொதி வசதியை வரையறையற்ற மாணவர்கள் பங்குபற்றகூடியவாறு ஏற்பாடு செய்வதற்கு எண்ணியுள்ளோம். எனவே உங்கள் உறவுகள் நண்பர்கள் என அனேகம் பேருக்கு இதனைப் பகிர்ந்து பயன்பெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கருத்தரங்கு தொடர்பான முழு நேரசூசி 18, 19 ம் திகதிகளில் அறியத்தரப்படும்.

Related Articles

Leave a Reply

Back to top button