Breaking Newsஇலங்கைசெய்திகள்

இரகசிய பட்டியலில் சந்தேக நபராக கோட்டாபய!!

Gotabaya

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 1989 ஆம் ஆண்டு இலங்கையின் மாத்தளையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் ஒரு சந்தேக நபராக அரசாங்க விசாரணையின் இரகசிய பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது என தென்னாபிரிக்காவின் சட்டத்தரணி யஸ்மின் சூக்காவின் சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்ட இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

அவ்வேளை குறைந்தது 700 பேர் – முக்கியமாக சிங்களவர்கள் – அவரது கட்டளையின் கீழ் பாதுகாப்புப் படையினரால் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டனர்.

இது, ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணி சம்பந்தப்பட்ட இரண்டாவது வன்முறைக் காலகட்டமாகும் என்றும் யஸ்மின் சூக்காவின் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட இணையத்தளம் தெரிவித்துள்ளது.

குறித்த காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷ மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்தின் அதிகம் அறியப்படாத மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button