இன்று உலக மக்களால் அதிகம் தேடப்படும் ஒன்றாக கூகுள் தேடுபொறி உள்ளது. அதில் திருமணமான பெண்கள் பலர் கணவனின் உள்ளத்தைக் கவரும் வித்தையை கூகுளில் தேடியுள்ளனர்.
திருமணம் முடிந்த பிறகு கணவர் வீட்டாரிடம் எப்படி நடந்து கொள்வது, கணவர் வீட்டில் தானும் ஒரு அங்கமாவது எப்படி, குடும்ப பொறுப்பை சுமப்பது எப்படி, திருமணத்திற்கு பிறகு நிறுவனத்தை எப்படி முன்னேக்கி கொண்டு செல்வது என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார்களாம். மேலும் கணவரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் தேடியுள்ளனராம்.
இந்த விடயம் புதிதாகத் திருமணமான கணவன்மாருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விடயம் எனினும் உறவினர்களிடம் கேட்டு அறியவேண்டிய விடயத்தை பெண்கள் கூகுளில் தேடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.