கூகுள் நிறுவனம் ரஷிய செய்தி நிறுவன செயலிகளுக்குத் தடை செய்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷியா மீதான புதிய தடைகளில் ஒரு பகுதியாக அந்நாட்டின் அரசு ஊடக நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்படும் என்று ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லியென் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ரஷியாவின் ஆர்.டி. ஒலிபரப்பு நிறுவனம், ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் ஆகியவற்றின் செயலிகளை ‘கூகுள்’ தடை செய்துள்ளது. ஐரோப்பா முழுவதும் கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்ய முடியாது என்று கூகுள் தெரிவித்துள்ளது.
இதன்படி ரஷிய செய்தி நிறுவனங்களுடன் தொடர்புடைய யூடியூப் சேனல்களை ஏற்கனவே கூகுள் தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.