ஆன்மீகம்செய்திகள்

கிறிஸ்தவர்களின் புனித நாளான பெரிய வெள்ளி!!

Good Friday

இன்றைய தினம் உலகமெங்கும் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. மனிதர்களின் பாவங்களைப் போக்க தன்னை கோர பலியாக கொடுத்த கிறிஸ்து இயேசுவின் பாடுகளை நினைவுகூரும் முகமாக இந்த நாள் அமைகின்றது.

தனது ஒரே பேறான குமாரனை தேவன் இந்த உலகத்திற்கு கொடுத்து மக்களின் பாவங்களை சுமந்து தீர்க்கச் செய்தார். அவரது சிலுவை மரணமே உலகத்தின் பாவங்களை கழுவி சுத்திகரித்தது.

எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தனத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். அவருடைய மரணம் சகல மக்களுக்கும் ஆனது. தன்னை நேசித்தவர்களுக்காக மட்டுமல்ல, தன்னை ஏற்றுக்கொண்டவர்களுக்காக மட்டுமல்ல, உலகத்தின் அத்தனை மக்களுக்காகவும் அவர் பாடுகளைச் சுமந்தார். இந்த உலகத்தில் அவர் பரிசுத்தராய் வாழ்ந்தது போல நாங்களும் பரிசுத்தவான்களாய் வாழவேண்டும் என்பது அவரது வாஞ்சையாய் இருந்தது. இன்று உலகம் பேரிரைச்சல் கொண்டிருக்கிறது. மற்றவர்களுக்காக மரித்த அவரது மரணத்தை நாம் ஒரு நொடி நினைப்போமானால் நாம் செய்த பாவங்களை அறிக்கையிடுவோமானால் நிச்சயம் நீடித்த நாட்கள் மகிழ்ச்சியாய் வாழ்வோம்.

‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28)

Related Articles

Leave a Reply

Back to top button