செய்திகள்புலச்செய்திகள்

ஜேர்மனியில் புலம் பெயர் தமிழர்கள் போராட்டம்!!

Germany

தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரியும் ஜோ்மனியில் தஞ்சம் கோரியுள்ள தமிழர்களை நாடு கடத்தும் திட்டத்தைக் கைவிட கோரியும், ஜேர்மனியில் புலம்பெயர் தமிழர்கள் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

50 க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகளை கடந்த ஆண்டு ஜேர்மனி இலங்கைக்கு நாடு கடத்தியது. இந்நிலையில் மற்றொரு தொகுதி தமிழர்களை நாடுகடத்த ஜேர்மன் குடிவரவு துறை தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜேர்மன் அதிகாரிகள் நாடு முழுவதும் பாரிய சோதனைகளை நடத்தி 100 தமிழ் அகதிகளை தடுத்து வைத்து அவர்களின் வீடுகளை சோதனையிட்டனர்.

அத்துடன், புகலிடக் கோரிக்கையாளர்களை தங்களுடைய அனுமதியைப் புதுப்பிக்குமாறு அதிகாரிகள் அழைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் கட்டடத்திற்கு வந்தவுடன் அவர்கள் பொலிஸ் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு அவர்களின் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் காரணமாக அவர்களது உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் தொடர்புகொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டதுடன் அதன் பின்னர் அவர்கள் பலர் நாடு கடத்தப்பட்டனர்.

அதேவேளை கடந்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணையை உருவாக்குவதிலும் இணை அனுசரணை வழங்குவதிலும் ஜேர்மனி முக்கிய பங்கு வகித்தது எனினும் அகதிகளை அந்நாடு இலங்கைக்கு நாடு கடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button