இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலை மீண்டும் குறைப்பு!!

fuel

 எரிபொருட்கள் விலை இன்று (17) இரவு 9 மணிமுதல் அமுலாகும் வகையில்  குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 
அதற்கமைய, ஒக்டென்  92 ரக பெற்றோலின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 370 ரூபாவாகும்.

லங்கா ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 415 ரூபாவாகும்.

எவ்வாறாயினும், ஒக்டென் 95 பெற்றோல், சுப்பர் டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button