வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவாமாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
என வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு நிலையப் பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் ஞாயிற்றுக்கிழமை(20) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20தொடக்கம் 30கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 தொடக்கம் 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இந்நிiலியில் மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக சிலாபம் வரையான வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான குளங்களின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 33 அடி 1 அங்குலமும், உறுகாமம் குளந்திந் நீர்மட்டம 16அடியும், அக்குளத்தில 4அங்குலமும், வாகனேரிக்குளத்தின் நீர்மட்டம 19அடி ஒரு அங்குலமும், கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 12அடியும், கித்துள்வெவ குளத்தின் நீர்மட்டம் 8அடி 5அங்குலமும், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 15அடி 5அங்குலமும், வடமுனைக்குளத்தின் நீர்மட்டம 12அடி 7அங்குலமுமாக உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்பாசனப் பொறியியலாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்
செய்தியாளர் – சக்தி