கடந்த வாரம் ஐவின்ஸ் தமிழின் அனுசரணையுடன் மகளிர் தினத்தைக் கொண்டாடிய மட்டுவில் வளர்மதி பெண்மணிகள் தென்மராட்சியில் அனைவரும் திரும்பி பா்ர்க்கும் படியாக ஒரு பெண்ணியம் சார் நிகழ்வாக உணவுத்திருவிழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர்.
நேற்று( 18.03.2023) வளர்மதி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் கிராம மக்களின் நாவுக்கு விருந்தளித்து பெண்களின் சுய தொழில் முயற்சிக்கு முன்னுதாரணம் ஆனதுடன்
நல்ல சுவைமிக்க சமையல், குடும்ப அங்கத்தவர்களை அம்மா செல்லங்களாக மாற்றும்’ என்ற பாரம்பரியத்தையும் நிலைநிறுத்த முன்னுதானமாக இருந்துள் ளனர். இதனால் இப்பெண்மணிகளுக்கு வாழத்துக்கள் குவிந்து வருகின்றது.
.இங்கு 15 க்கு மேற்பட்ட உணவு வகைகளைத் தயாரித்து நியாய விலையில் பரிமாறியதுடன் ஒவ்வோர் பெண்மணியும் கணிசமான இலாபத்தையும் பெற்றுள்ளனர் எனவும் இலாபத்திலிருந்து மாதர்சங்கத்திற்கும் சிறு பங்களிப்பைச் செய்வுள்ளனர் எனவும் தகவல்கள் அறியமுடிகிறது.