உலகிலேயே தனியொரு உருளை வடிவான மீன்தொட்டியாக சாதனைப் புத்தகங்களில் இடம்பிடித்து ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள ரெடிஸ்ஸன் ப்ளு விருந்தகத்தின் வரவேற்பறையில் இருந்த சுமார் 15.85 மீற்றர் உயரமான எக்வா டொம் என்று அழைக்கப்படும் ஒரு மில்லியன் லீட்டர் கடல்நீரைக் கொண்ட பாரிய மீன்தொட்டி (16) வெடித்துச் சிதறியுள்ளது.
இதன்காரணமாக விருந்தகம் மற்றும் அதனை அண்டிய வீதிகள் நீரில் மூழ்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த பாரிய மீன் தொட்டியில் 1500க்கும் மேற்பட்ட பலவிதமான வண்ணமீன்கள் இருந்துள்ளன.
மீன்தொட்டி வெடித்ததன் காரணமாக அதன் கண்ணாடித்துகள்கள் விருந்தகத்திற்கு வெளியிலும் சிதறியதால் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக ஜெர்மன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், பாதுகாப்பாக மீட்கப்பட்ட மீன்கள் வெவ்வேறு மீன்தொட்டிகளில் சேகரிக்கப்பட்டுள்ளன.