செய்திகள்விளையாட்டு

முதல் சுற்று முடிவு-கடைசி_ஆட்டத்திலும்கிங் பைட்டர்ஸ் வெற்றி!!

First round results

பிளே ஓவ்சுற்றில்அரியாலை கில்லாடிகளை எதிர்கொள்கிறது

யாழ். கரப்பந்தாட்ட லீக் தொடரில் இன்று இரவு புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வல்வையூர் வொலி வாரியஸ் அணியை ஆவரங்கால் கிங் பைட்டர்ஸ் 3:1 என்ற சுற்றுக் கணக்கில் வெற்றிபெற்றது.
ஆட்டத்தின் நாயகனாக கிங் பைட்டர்ஸ் வீரர் லக்‌ஷி தெரிவானார்.
இந்தப் போட்டியிலும் வெற்றிபெற்ற கிங் பைட்டர்ஸ், முதல் சுற்றில் எந்தவொரு அணிகளும் எட்ட முடியாத அளவுக்கு புள்ளிப்பட்டியலில் தொடர்ந்தும் தனது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.
அடுத்த சுற்றான பிளே ஒவ் போட்டியில், முதல் சுற்றில் முதலிடத்தைப் பிடித்த கிங் பைட்டர்ஸ் அணி, இரண்டாவது இடத்தைப் பிடித்த அரியாலை கில்லாடிகள் 100 அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
இதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் அதேவேளை, தோற்கும் அணி முதல் சுற்றில் மூன்றாம் நான்காம் இடங்களைப் பிடித்திருந்த அச்சுவேலி மற்றும் தீவக அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் மோதும். இதில் வெற்றிபெறும் அணி இரண்டாவது அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும்

Related Articles

Leave a Reply

Back to top button