சினிமாசெய்திகள்

அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ள படத்தின் முதல்பார்வை வெளியானது!!

first look

பிரபல நடிகர் அர்ஜுனுடன் கைகோர்த்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதில் ஐஸ்வர்யா ராஜேஷ் அதிகம் ஆர்வம் காட்டி வரும் ஒருவர்.

இந்நிலையில், அர்ஜூனுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஆக்‌ஷன் மற்றும் புதிய கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இத்திரைப்படத்திற்கு ‘தீயவர் குலைகள் நடுங்க’ என பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது தீயவர் குலைகள் நடுங்க திரைப்படத்தின் முதல்பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இது தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

ஜி.எஸ்.ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் ஜி.அருள் குமார் தயாரிப்பில், தினேஷ் இலெட்சுமணன் இயக்கும் இத்திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பரத் ஆசீவகன் இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button