உடப்புஸ்ஸல்லாவ நகரத்தில் நேற்று (19) மாலை ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 7 தற்காலிக வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன.
இத் தீ விபத்தில் எவருக்கும் உயிர்ச் சேதங்களோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் வர்த்தக நிலையங்களில் இருந்த பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இவற்றில், புடவை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையங்களும் அடங்குவதாகவும், குறித்த வர்த்தக நிலையங்கள் தகரங்கள், பலகைகள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காவல்துறையினரும், பொது மக்களும் இணைந்து பல மணிநேர போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத அதேவேளை, சேதவிபரங்கள் தொடர்பான மதிப்பீட்டு பணிகள் இடம்பெற்று வருகின்றன.
சம்பவம் தொடர்பில் உடப்புஸ்ஸல்லாவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.