கந்தானை பிரதேசத்தில் உள்ள இரசாயன உற்பத்தி தொழிற்சாலையொன்றின் களஞ்சியசாலையில் இன்று காலை ஏற்பட்ட தீயினால் வெளியான புகையை சுவாசித்ததன் காரணமாக 68 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுவாசக் கோளாறு காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராகம பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.
கந்தானை புனித செபஸ்டியன் கல்லூரி மற்றும் அதன் பெண்கள் கல்லூரி மாணவிகள் குழுவொன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கந்தானையில் உள்ள இரசாயன உற்பத்தி தொழிற்சாலைக்கு சொந்தமான களஞ்சியசாலையில் இன்று காலை 7.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வெலிசறை கடற்படை அதிகாரிகள், நீர்கொழும்பு மற்றும் கம்பஹா தீயணைப்பு பிரிவினர் 2 மணித்தியாலங்களுக்கு மேலாக தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த தொழிற்சாலையில் கணக்காளராக பணியாற்றிய ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.