மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பன இணைந்து காவல்துறை சிசிரீவி பிரிவின் ஊடாக போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பான அபராதப் பத்திரத்தை வீடுகளுக்கு அனுப்பும் முறைமையொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகர் முழுவதும், 33 சந்திகள் காவல்துறை சிசிரீவி பிரிவினரால் கண்காணிப்படுகின்றன.
பொதுமக்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பை பிரதான கடமையாகக் கொண்டுள்ள இந்தப்பிரிவினால், குற்றமிழைக்கூடிய இயலுமையை குறைத்தல், குற்றத்தை அவதானித்து நடவடிக்கை எடுத்தல், குற்ற விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் போன்ற கடமைகளும் ஆற்றப்படுகின்றன.
அத்துடன், போக்குவரத்து குற்றங்கள் தொடர்பிலும் இந்தப் பிரிவினால் அவதானிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.