இலங்கை மக்களின் தற்போதைய வறுமை நிலையைக் கருத்தில் கொண்டு மனிதாபிமான நிதி உதவிகளை வழங்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
இதன்படி, 74 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியுதவியினை வழங்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
25 மாவட்டங்களைச் சேர்ந்த குறைந்த வருமானத்தை பெறும் சுமார் 80,000 குடும்பங்கள் இதன் மூலம் நன்மையடையவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.