நேற்றைய தினம் நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!
Finance Minister Pashil Rajapaksa
நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கூறிய விசேட அறிவிப்புகள்.
அனைத்து அரச துறை ஊழியர்களுக்கும் 5000 ரூபா மேலதிக கொடுப்பனவு,
இம் மாதம் முதல் (ஜனவரி) சமுர்த்தி பெறுவோரின் 3,500 மாதாந்த கொடுப்பனவுக்கு 1000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்கப்படும்.
அரச ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு உதவித்தொகையாக மாதாந்தம் 5,000 ரூபா வழங்கப்படும்.
அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்.
மாதம் 15 கிலோ கோதுமை மா ஒவ்வொரு தோட்ட குடும்பத்திற்கும் கிலோ ஒன்றுக்கு 80 ரூபா படி வழங்கப்படும் .
20 பேர்சர்ஸ்க்கு குறைவான விவசாய நிலங்களை கொண்ட விவசாயிகளுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு
உரத் தட்டுப்பாட்டினால் ஏற்படும் பயிர் இழப்பு காரணமாக எதிர்காலத்தில் நெல் விவசாயிகளுக்கு நெல்லுக்கு கிலோ ஒன்றுக்கு 75 ரூபா விலை நிர்ணயம் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார் என நிதி அமைச்சர் தெரிவிப்பு.