ஆன்மீகம்செய்திகள்

இன்று விநாயகர் சதுர்த்தி!!

fasting

அனைவரும் விரும்பி கொண்டாடக் கூடிய பண்டிகைகளில் இந்த விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. அதனை எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து பார்ப்போம்.

வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வீட்டு பூஜை அறை முதற்கொண்டு சுத்தம் செய்யவும்.

இன்று காலை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, வழிபாட்டை தொடங்கலாம். விநாயகர் சதுர்த்தி என்றாலே கட்டாயமாக எல்லோர் வீட்டிலும் பிள்ளையார் வாங்கக்கூடிய வழக்கம் இருக்கும்.

சில வீட்டில் வர்ணப் பிள்ளையார் வாங்குவார்கள். ஒரு சிலர் வீட்டில் களிமண் பிள்ளையார் வாங்குவார்கள். ஒரு சிலர் வீட்டில் பிள்ளையாரே வாங்காமல் வீட்டில் இருக்கக்கூடிய பிள்ளையாரை வைத்தே வழிபாடு செய்வார்கள். அது அவரவர் பழக்கம்.

உங்கள் வீட்டு வழக்கப்படி விநாயகரை வைத்து பூஜை அறையில் வழிபாடு செய்யலாம். வீட்டில் விநாயகர் சிலை இருந்தால் இன்றையதினம் கட்டாயமாக அந்த விநாயகர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

கடையிலிருந்து நீங்கள் விநாயகரை வாங்குவதாக இருந்தால் களிமண் பிள்ளையாரை வாங்கி வரலாம். மண்ணால் செய்யப்பட்ட கண்ணியம்மன் பிள்ளையாருக்கு அதீத சக்தி உண்டு.

வருடத்தில் ஒரு நாள் அந்த வியாபாரிகளுக்கு உதவியாக இருக்கும் வகையில் கூட நீங்கள் ஒரு களிமண் பிள்ளையாரை பேரம் பேசாமல் காசு கொடுத்து வாங்கிக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வது நல்லது. இன்று பிள்ளையார் கொடை மிகவும் அழகாக விற்கப்படும். ஒரு பிள்ளையார் குடையை பேரம் பேசாமல் வாங்கிக்கோங்க.

உங்களுக்கு களிமண் கிடைத்தால் அந்த களிமண்ணை உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து, உங்களுக்கு தெரிந்த படி உங்கள் கையாலேயே ஒரு சிறிய பிள்ளையாரை செய்து, உங்கள் கையாலோ அல்லது உங்கள் குழந்தை கையாலோ செய்யப்பட்ட, அந்தப் பிள்ளையாரை, நீங்கள் வாங்கி வந்த களிமண் பிள்ளையாருக்கு பக்கத்தில் வைத்து இரண்டு பிள்ளையாருக்கும் சேர்த்து எருக்கன் பூ, அருகம்புல் இப்படி உங்களுக்கு கிடைத்த அலங்கார பொருட்களை எல்லாம் வைத்து விநாயகரை அழகு படுத்தி, முழு திருப்தியோடு சந்தோஷத்தோடு இந்த வழிபாட்டை தொடங்குங்கள்.

மனதிருப்தியோடு சந்தோஷத்தோடு மன நிறைவாக விநாயகரிடம் நீங்கள் எது கேட்டாலும் அவர் உடனே கொடுத்து விடுவார். ஏனென்றால் இன்று நாம் செய்யக்கூடிய பூஜையால் விநாயகர் ரொம்பவும் சந்தோஷமாக இருப்பார்.

உங்கள் கையாலேயே நீங்கள் பிள்ளையாரை பிடித்து வைத்து வழிபாடு செய்து வேண்டுதல் வைக்கும் போது அந்த வேண்டுதலுக்கு சக்தி இரட்டிப்பு மடங்காக அதிகரிக்கும். நீங்கள் வேண்டியது உடனே நடக்கும். உங்களுடைய வாழ்க்கையில் தடைகள் எல்லாம் தகர்க்கப்படும்.

இதோடு மட்டுமல்லாமல் உங்கள் பூஜை அறையில் இருக்கும் மற்ற சுவாமி படங்களுக்கும் அலங்காரங்கள் செய்து முடித்துவிட்டு, விநாயகருக்கு பிடித்த மோதகம், கொழுக்கட்டை, சுண்டல், பால், பழம் இப்படி உங்களால் முடிந்த நிவேதனத்தை வைத்து தீப தூப ஆராதனை காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

இன்றைய தினம் காலை 6:00 மணி முதல் 7:15 வரை, வீட்டில் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்யலாம். முடியாதவர்கள் காலை 9:00 மணி முதல் 12:00 மணிக்குள் பூஜையை செய்து கொள்ளுங்கள். அப்படியும் முடியாதவர்கள் மாலை 6:00 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் உங்களுடைய பூஜையை வீட்டில் செய்யலாம்.

சில பேருக்கு வாழ்க்கையில் ரொம்பவும் தடைகள் இருக்கும். எந்த வேலையை தொட்டாலும் தோல்வி அடைந்து விடுவார்கள். இப்படிப்பட்டவர்கள் இன்றைய தினம் பிள்ளையார் உருண்டை அல்லது பிள்ளையார் கொழுக்கட்டை ஏதாவது ஒரு நிவேதத்தை 101 ஒன்று என்ற கணக்கில் தயார் செய்ய வேண்டும்.

அதாவது உங்கள் கையாலேயே இந்த கொழுக்கட்டையை நீங்கள் பிடிக்க வேண்டும். ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி வீட்டில் உள்ள பெரியவர்களின் துணையோடு கொழுக்கட்டை செய்யத் தொடங்க வேண்டும்.

மாவு தயாரான பிறகு உங்களுடைய வேண்டுதலை மனதில் நினைத்துக் கொண்டு உங்கள் கையாலேயே ஒவ்வொரு கொழுக்கட்டையாக பிடித்து, வேகவைத்து பிரசாதத்தை கொண்டு போய் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் விநாயகருக்கு நிவேதியமாக படைத்து விட்டு, அந்த நிவேதனத்தை எடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த பிரசாதத்தை உங்கள் கையாலேயே விநியோகம் செய்தால், வாழ்வில் வரக்கூடிய தடைகள் நீங்கும். பிறகு உங்களுக்கு எல்லா விஷயத்திலும் வெற்றி கிட்டும்.

இன்றைய தினம் வாங்கி வைத்த விநாயகர் சிலையை மூன்று நாட்கள் நம்முடைய வீட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் மூன்றாவது நாள் வெள்ளிக்கிழமை வருகிறது.

வெள்ளிக்கிழமை அன்று உங்களுக்கு விநாயகரை கரைப்பதற்கு விருப்பமில்லை என்றால், ஐந்தாவது நாள் ஞாயிற்றுக்கிழமை அந்த விநாயகரை கொண்டு போய் உங்கள் கையாலேயே கரைத்து விடுங்கள்.

விநாயகரைக் கொண்டு போய் வீதியில் இருக்கும் பெரிய விநாயகருக்கு பக்கத்தில் எல்லாம் வைத்து வரக்கூடாது. உங்கள் வீட்டுப் பிள்ளையாரை நீங்கள் தான் கொண்டு போய் தண்ணீரில் போட்டுவிட்டு வரவேண்டும்.

உங்கள் வீட்டின் அருகில் ஆறு, குளம், ஏரி, கிணறு எது இருந்தாலும் ஜாக்கிரதையாக கொண்டு போய் அந்த விநாயகரை நீர் நிலைகளில் சேர்த்து விட்டு வருவது சிறப்பான பலனை கொடுக்கும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Related Articles

Leave a Reply

Back to top button