சினிமாசெய்திகள்

‘ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்’ வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!!

Fantastic Beasts

‘ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்’ (Fantastic Beasts) திரைப்படத்தின் மூன்றாம் பாகமான ‘த சீக்ரட்ஸ் ஒஃப் டம்பள்டோர்’ ( Secrets of Dumbledore) வெளியாகும் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் படத்தின் 18 போஸ்டர்களை அதன் தயாரிப்பு நிறுவனமான வோர்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பிரபல ஹரிபொட்டர் நாவலின் கதையாசிரியரான ஜே.கே. ரொவ்லிங் இந்த திரைப்படத்துக்கான கதையையும் எழுதியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் ஜுட் லோவ் (Jude Law), எடி ரெட்மைன் (Eddie Redmayne), டேன் ஃபொக்லர் (Dan Fogler),மெட்ஸ் மிக்கல்சன் (Mads Mikkelsen),எஸ்ரா மில்லர் (Ezra Miller), எலிசன் சுடொல் (Alison Sudol), ஜெஸ்ஸிகா வில்லியம்ஸ் (Jessica Williams) மற்றும் கத்தரின் வோட்டர்ஸன் (Katherine Waterston) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதற்கு முந்தைய இரு பாகங்களிலும் கிலெட் கிரின்டல்வோட் (Gellert Grindelwald) என்ற கதாபாத்திரத்தில் பிரபல ஹொலிவூட் நடிகரான ஜொனி டெப் (Johnny Depp) நடித்திருந்தார்.

எனினும், அவரின் முன்னாள் மனைவி எம்பர் ஹர்ட் (Amber Heard) உடனான விவாகரத்து சர்ச்சை காரணமாக அவர் ‘த சீக்ரட்ஸ் ஒஃப் டம்பள்டோர்’ படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த அறிவிப்பு கடந்த வருடம் வோர்னர் ப்ரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தினால் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் ‘ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்’ திரைப்படத்தின் ‘வெயார் டு ஃவைன்ட் தெம்’ (Where to Find Them) மற்றும் ‘த க்ரைம்ஸ் ஒஃப் கிரின்டல்வோட்’ (The Crimes of Grindelwald) ஆகிய இரு பாகங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button