ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு திருப்பியனுப்புதல் தொடர்பில் சில விதிகளை அறிமுகப்படுத்தி, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
16 விதிகள் அடங்கிய இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், நேற்று நள்ளிரவு வெளியானது.
இதன்படி, ஒவ்வொரு ஏற்றுமதியாளரும், இலங்கைக்கு வெளியில் ஏற்றுமதி செய்யப்படும் எல்லாப் பொருட்கள் அல்லது வழங்கப்படும் பணிகள் தொடர்பில், கப்பலேற்றும் அல்லது பணிகளை வழங்கும் திகதியிலிருந்து 180 நாட்களினுள் ஏற்றுமதிப் பெறுகைகளை கட்டாயமாக இலங்கையில் பெறுதல் வேண்டும்.
அத்தகைய பெறுகைகளைப் பயன்படுத்தி இலங்கையில் கிடைக்கப்பெற்ற ஏற்றுமதிப் பெறுகைகளின் எஞ்சியதை, தொடர்ந்து வருகின்ற மாதத்தின் ஏழாவது நாளன்று அல்லது அதற்கு முன்னர் இலங்கை ரூபாவாக கட்டாயமாக மாற்றுதல் வேண்டும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.