2019 ஆம் ஆண்டு முதல் கஞ்சா எண்ணெய் விலையானது 75 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கஞ்சா செய்கையைச் சட்டபூர்வமாக்குதவன் ஊடாக அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கையின் கடனைச் செலுத்த முடியாது என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
கஞ்சாவிற்கான கேள்வி குறைவாக இருப்பினும், உற்பத்தி அதிகமாக இருப்பதால் சர்வதேச அளவில் கஞ்சா எண்ணெய் பொருட்களின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு சூழலில் அதனை சட்ட ரீதியாக அங்கீகரிப்பதற்கு முயலுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், நாட்டில் இந்த செய்கை இடம்பெறுமாயின் தேசிய சந்தைக்குள் சட்டவிரோதமாக ஊடுறுவுவதற்கும் வாய்ப்புள்ளது.
இதனால் அதிகளவானோர் பாதிப்படையும் அபாயம் உள்ளதுடன், நாட்டின் பொருளாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் குறிப்பிட்டுள்ளது.