Breaking Newsஇலங்கைசெய்திகள்
தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்!!
Exam

அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு இன்று (26) ஆரம்பமானது.
நாடளாவிய ரீதியில் 434 நிலையங்களில் இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தென் மாகாணத்தில் தவணைப் பரீட்சைகள் நடைபெறுவதால், அந்த மாகாணத்தில் மதிப்பீட்டு நடவடிக்கைகள் நாளை (27) முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் எதிர்வரும் 31ஆம் திகதி வரை மதிப்பீடு செய்யப்பட உள்ளன.