இலங்கைசெய்திகள்

கலைகளை வளர்ப்பதில் முன்மாதிரியாகத் திகழும் வலிகாமம் தென் மேற்கு, பிரதேச சபைத் தவிசாளர்!!

Event

வங்கம் 2023 ம் ஆண்டிற்கான முதலாவது முழுநிலா கலைநிகழ்வு நேற்று 06.01.2023 இடம்பெற்றது .
இக் கலைவிழாவானது பி.ப 2.00 மணியளவில் பண்டத்தரிப்பு கலாசார மண்டபத்தில் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

விழாவின் பிரதம விருந்தினராக திரு.பஞ்சாச்சரம் கணேசன் (கோட்டக் கல்விப்பணிப்பாளர் கோட்டக்கல்வி அலுவலகம் சண்டிலிப்பாய்)அவர்களும், சிறப்பு விருந்தினரக திருமதி லுசிந்தா தர்மினி பாலேந்திரன் அவர்களும் (யா/ பண்டத்தரிப்பு ஜெசிந்தா ) அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

தமிழர் பாரம்பரியமான நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.ஒவ்வோரு மாத முழு நிலா கருத்தரங்குகளையும் ஒவ்வொரு இடத்தில் தவறாது நடத்துவதே இதன் வியூகம் ஆகும் .
சமூக கட்டமைப்புகளில் மிக அக்கறையுடன் புது அணுகுமுறைகளைக் கையாண்டுவரும் இந்த தவிசாளரின் அணுகு முறைகளை ஏனையவர்களும் பின்பற்றி, தமது பிரதேச சபை சமூக கட்டமைப்பு வளரச்சிகளை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என ஐவினஸ் இணையதளம் வேண்டுகோள் விடுக்கிறது.

Related Articles

Leave a Reply

Back to top button