ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
நிதி, எரிசக்தி, உயர்மட்ட பிரமுகர் விஸா மற்றும் போக்குவரத்து முதலான துறைகளை இந்தத் தடைகள் இலக்கு வைக்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேநேரம், யுக்ரேனிலிருந்து தப்பிச் செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்களை வரவேற்பதற்கு, ஐரோப்பிய நாடுகள் தயாராக உள்ளதென தெரிவிக்கப்படுகிறது.
தலைநகர் கிவ் உட்பட மோதல் இடம்பெறும் பகுதிகளில் இருந்து வெளியேறும் பொதுமக்கள், எல்லைகள் ஊடாக ஐரோப்பாவுக்குள் நுழைவதாகவும் தெரிவிக்கட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், 18 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட ஆண்கள் நாட்டிலிருந்து வெளியேற, யுக்ரேன் எல்லை பாதுகாப்புப் படை தடை விதித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.