இலங்கைசெய்திகள்

தரம் 1 இலிருந்து ஸ்போக்கன் இங்கிலீஷ்’ – கல்வி அமைச்சு தீர்மானம்!!

English

  ஆங்கில மொழியின் சிறப்பு மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அனைத்து தேசிய பள்ளிகளிலும் மார்ச் 30 முதல் தரம் ஒன்றிலிருந்து ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ கற்பிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, 6-9 மற்றும் 10-13 வரையான அனைத்து பாடசாலை பாடத்திட்டங்களையும் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இதற்கான முன்னோடித் திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படும தகவல் தொழில்நுட்பத்துடன் செயற்கை நுண்ணறிவு பாடத்தையும் கற்பிக்க அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தேவையான பாட மேம்பாடு மற்றும் வள திட்டமிடல் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் 2030 ஆம் ஆண்டளவில் கல்வித்துறை தொடர்பான உலகளாவிய நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான சவாலை வெற்றிகொள்ள அமைச்சு செயற்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button