உலகின் மூத்த பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்X நிறுவனத்தின் செயல் தலைவருமான எலான் மஸ்க் ருவிட்டர் நிறுவனத்தின் அனைத்துப் பங்குகளையும் 44 பில்லியன் டொலருக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் மிகப்பெரிய சமூகவலைத்தளமாகச் செயல்பட்டுவரும் ருவிட்டர் நிறுவனம் இதுவரை பொதுவான நிறுவனமாக இயங்கிவந்தது. தற்போது எலான் அதை விலைக்கு வாங்கியதால் தனியார் நிறுவனமாக மாறப்போவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ருவிட்டரின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் ஊழியர்களிடம் நேற்று பேசியுள்ளார். அதில் ஒப்பந்தம் முடிந்ததும் தளம் எந்தத் திசையில் செல்லும் என்று எங்களுக்குத் தெரியாது என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.