டெஸ்லா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எலான் மஸ்க் இந்த வருடம் மின்சார மகிழுந்துகள் வெளியிடப்பட மாட்டாது என கூறியதால், அந்நிறுவனத்தின் மதிப்பு வெகுவாக குறைவடைந்துள்ளது.
டெஸ்லா மின்சார மகிழுந்து தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது.
அத்துடன், அந்நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எலான் மஸ்க், டெஸ்லா இந்த வருடம் மின்சார மகிழுந்துகளை வெளியிடாது எனவும், ஊழியர்களுக்கு பதிலாக ரோபோக்களை பணியில் ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
எலான் மஸ்க் இதனை தெரிவித்த மறுநாளே நியூயோர்க் பங்குச்சந்தையில் டெஸ்லாவின் மதிப்பு 12 சதவீதம் குறைவடைந்துள்ளது.
இதனால் அந்நிறுவனத்தின் மதிப்பு 100 பில்லியன் டொலர் அளவிற்கு வீழ்ச்சியைடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.