6 வயது மதிக்கத்தக்க யானைக் குட்டி வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் பப்பாசி தோட்டத்திற்குள் நுழைந்து மீண்டும் காட்டிற்குச் செல்ல முடியாத நிலையில் தவித்து வருகின்றது.
யானைக்குட்டி உணவருந்த முடியாத நிலையில், காணப்பட்டுள்ளது.
இதேவேளை யானையைப் பார்வையிடச் சென்ற மக்களை துரத்தி அச்சமடைய வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரதேசவாசிகள் வவுனியா மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.
குறித்த திணைக்களத்தினரால் வடமாகாண கால்நடை மருத்துவர் கிரிதரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வடமாகாண மருத்துவர் கிரிதரன் தலைமையிலான குழுவினர் வெங்காய வெடியினை உட்கொண்டதனாலையே யானைக்குட்டி உணவருந்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததோடு, யானைக்குட்டிக்கான சிகிச்சையை மேற்கொண்டிருந்தார்.
செய்தியாளர் – கிஷோரன்