‘அடுத்து, வரும் வாரங்களில் நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்படும்’ என “இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன” தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை நீண்டகால திட்டங்களை நடைமுறைப்படுத்தாததன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள மின் நெருக்கடியை தவிர்ப்பதற்காக மின் பொறியியலாளர்களால் முன்வைக்கப்பட்ட குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த மின்சார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.